தொற்றாளர்கள் மூன்று இலட்சத்தை கடந்துள்ளமை ஆபத்தான நிலைமை! சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டு
நாட்டில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தைக் கடந்திருப்பது சிறந்த அறிகுறியல்ல என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
"நாட்டில் குறுகிய காலத்துக்குள் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தைக் கடந்துள்ளது. இது சிறந்த அறிகுறியல்ல.
ஆபத்தான நிலைமையை இது எடுத்துக்காட்டுகின்றது. எனவே, பொதுமக்கள் சுகாதாரப் பாதுகாப்பு விதிமுறைகளைத் தொடர்ந்தும் பேணாவிடின் மீண்டும் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும்" - என்றார்.
நாட்டில் நேற்றிரவு வரையில் 3 இலட்சத்து 4 ஆயிரத்து 161 கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவ்வாறு இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் 2 இலட்சத்து 73 ஆயிரத்து 496 பேர் குணமடைந்துள்ளனர். 4 ஆயிரத்து 324 பேர் உயிரிழந்துள்ளனர். ஏனைய தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அமெரிக்காவின் ஈரான் மீதான அழித்தொழிப்பு: யுத்தம் நிறைவடைந்து விட்டதா..! 23 மணி நேரம் முன்
ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்காவிட்டால்.,ஈரானுக்கு 48 மணி நேரம் கெடு விதித்த டிரம்ப் News Lankasri
மருத்துவமனைக்கு வந்த நந்தினி, ரேணுகா பார்த்த ஷாக்கிங் விஷயம், கெஞ்சும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
குடும்பத்திற்கு எதிராக மீனா செய்த காரியம், கோபத்தில் கடுமையாக திட்டிய ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam