கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்!விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
எதிர்வரும் ஒன்றிரண்டு நாட்களில் கோவிட் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் (Hemantha Herath) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 10 – 15 நாட்களாக மக்களின் பொறுப்புணர்ச்சியற்ற செயல்களினால் இந்த நிலைமை உருவாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நிலைமையின் அடிப்படையில் கோவிட் தொற்று உறுதியாளர்களை கட்டுப்படுத்த முடியாது என தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாட்களில் கோவிட் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பினை கட்டுப்படுத்த வேண்டுமாயின் கடுமையான சுகாதார வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
வெளியிடங்களுக்கு செல்லும் போது சுகாதார வழிகாட்டல்களை முழுமையாக பின்பற்ற வேண்டுமென தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri
