நாட்டில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு!
நாட்டில் கொவிட் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வடைந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்றைய தினம் மேலும் மூன்று கொவிட் மரணங்கள் பற்றிய தகவல்களை அரசாங்கத் தகவல் திணைக்களம் இன்றைய தினம் வெளியிட்டுள்ளது.
இதன்படி கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 247 ஆக உயர்வடைந்துள்ளது.
1. பத்தரமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயதான ஆண் ஒருவர் ஹோமாகம வைத்தியசாலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.கொவிட் காரணமாக ஏற்பட்ட இருதய நோயினால் அவர் உயிரிழந்துள்ளார்.
2. கொழும்பு 15 பிரதேசத்தைச் சேர்ந்த 81 வயதான ஆண் ஒருவர் தேசிய தொற்று நோய் விஞ்ஞான பிரிவில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். கொவிட், நிமோனியா மற்றும் சுவாசப்பை பிரச்சினையால் இவர் உயிரிழந்துள்ளார்.
3. கொழும்பு 10 பிரதேசத்தைச் சேர்ந்த 89 வயதான பெண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். கொவிட், நிமோனியாவினால் அவர் உயிரிழந்துள்ளார்.
சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தல்களுக்கு அமைய இந்த விபரங்களை அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.