கோவிட் மரணங்களின் எண்ணிக்கை இன்று மேலும் உயர்வு
கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 484ஆக உயர்வடைந்துள்ளது.
மட்டக்களப்பு- ஏறாவூரைச் சேர்ந்த 65 வயதுடைய பெண் ஒருவரே கோவிட் தொற்றால் மரணித்துள்ளார்.
இது தொடர்பான அறிவித்தல் இன்று இரவு அரச தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
அவர் மட்டக்களப்பு மருத்துவமனையில் கோவிட் தொற்றாளியாக கண்டறியப்பட்டு பின்னர் கொழும்பு தொற்று நோயியல் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் அவரின் இறப்புக்கு கோவிட் மற்றும் நிமோனியா காய்ச்சல் என்பனவே காரணம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.



அதானி குழுமத்தின் மோசடிகளை அம்பலப்படுத்திய அமெரிக்கா 9 மணி நேரம் முன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தாய், தந்தையா இவர்கள்.. இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் Cineulagam

வெளிநாட்டில் இருந்து வந்த மாமியார்! சில நாட்களில் உயிரிழந்த மருமகள் மற்றும் இரட்டை குழந்தைகள் News Lankasri

தன் வெற்றியை விமர்சித்தவர்களுக்கு ஒரு வாரம் கழித்து பதிலடி கொடுத்த அசீம்: என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? Manithan
