நாட்டில் கோவிட் மரணங்களின் எண்ணிக்கை 502 ஆக உயர்வு
இலங்கையில் கோவிட் மரணங்களின் எண்ணிக்கை 502 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்றைய தினம் ஐந்து கோவிட் மரணங்கள் தொடர்பிலான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
1. பல்லேகலே பிரதேசத்தைச் சேர்ந்த 74 வயதான ஆண் ஒருவர், கண்டிய தேசிய வைத்தியசாலையில் கடந்த 2ம் திகதி உயிரிழந்துள்ளார். கோவிட், நிமோனியா மற்றும் மூளைக்கு இரத்தம் கசிதல் காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.
2. நுகோகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 82 வயதான ஆண் ஒருவர் தேசிய தொற்று நோய் விஞ்ஞான பிரிவில் இன்று உயிரிழந்துள்ளார். கோவிட் நோய்த்தொற்று மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.
3. பரவர்தனஓய பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதான ஆண் ஒருவர் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். புற்று நோய் மற்றும் கோவிட் தொற்றினால் இவர் உயிரிழந்துள்ளார்.
4. மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த 77 வயதான பெண் ஒருவர் தம்பதெனிய ஆதார வைத்தியசாலையில் கடந்த பெப்ரவரி மாதம் 25ம் திகதி உயிரிழந்துள்ளார். கோவிட் நோய்த்தொற்று மற்றும் இருதய நோயினால் இவர் உயிரிழந்துள்ளார்.
5. கன்னன்தோட்டைப் பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதான ஆண் ஒருவர் கரவனல்ல ஆதார வைத்தியசாலையில் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் உயிரிழந்துள்ளார். கோவிட், நிமோனியா காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.
சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தல்களுக்கு அமைய இந்த விபரங்களை அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.


படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
