கிளிநொச்சியில் வடக்கு தென்னை முக்கோண வலயத்தை உருவாக்குவதன் அங்குரார்ப்பண நிகழ்வு
கிளிநொச்சியில் வடக்கு தென்னை முக்கோண வலயத்தை உருவாக்குவதன் அங்குரார்ப்பண நிகழ்வும், சர்வதேச தென்னை விழா மற்றும் தென்னை வளர்ப்பாளர்களை கெளரவிக்கும் நிகழ்வும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் பளை மாதிரி தென்னை தோட்டம் பகுதியில் குறித்த நிகழ்வு இன்று (02.09.2023) நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வில் அமைச்சர் ரமேஸ் பத்திரன, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் லொஹான் ரத்வத்த, நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன், தெங்கு அபிவிருத்தி சபை அதிகாரிகள், தென்னை உற்பத்தியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
தென்னங்கன்றுகள் வழங்கி வைப்பு
இதன்போது, தென்னை செய்கையாளர்களுக்கு ஒரு ஏக்கர் தென்னை செய்கைக்கான தென்னங்கன்றுகளும், உள்ளீடுகளும் வழங்கப்பட்டுள்ளன.
இதன்போது அமைச்சர் ரமேஸ் பத்திரன தெரிவிக்கையில், இன்று இரண்டு வருடங்களில் 3. 5 மில்லியன் தென்னங்கன்றுகளை நாட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இதன்மூலம் வடமாகாணத்தில் உள்ள மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும் என நம்புகிறோம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது தென்னை செய்கையை சிறப்பாக மேற்கொண்ட செய்கையாளர்களுக்கு நினைவுப் பரிசில்கள் வழங்கப்பட்டதுடன் சிறந்த தென்னைச் செய்கையாளர்களுக்கு ரூபா இரண்டு இலட்சம் பெறுமதியான காசோலைகளும் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் இன்றைய நாளின் நினைவாக அமைச்சரின் கரங்களால் தென்னங்கன்றும் நாட்டி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.














ரஷ்ய நிலநடுக்கத்தின் எதிரொலி! பாறை சரிவிலிருந்து கடல் சிங்கங்கள் தப்பிக்கும் திகில் காட்சி! News Lankasri

ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் ரஜினியின் கூலி.. இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
