மலையகத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: வீடுகளில் புகுந்த வெள்ள நீர்
மலையகத்தில் பெய்து வரும் மழைக்காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஹட்டன் - ரொத்தஸ் தோட்டத்தின் ஊடாக பாயும் களனி ஆற்றின் கிளையாறு பெருக்கெடுத்ததன் காரணமாக தோட்டத்தின் 20 வீடுகளினுள் வெள்ள நீர் புகுந்துள்ளது.
இதன் காரணமாக வீட்டு பொருட்கள், உணவு பொருட்கள், ஆவணங்கள், பாடசாலை மாணவர்களின் பாடநூல்கள், கால்நடைகள் என அனைத்தும் வெள்ள நீரில் பாதிக்கப்பட்டுள்ளன.
சில வீடுகளின் கூரைகள் உடைந்து வீடுகள் தொடர்ந்து மழை நீரில் நனைந்த நிலையில் காணப்படுகின்றது.
வெள்ள நீரில் வீடுகள்
தற்போது வெள்ளம் வடிந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட 20 குடும்பம்பங்களும் பாதிக்கப்பட வீடுகளின் ஒரு பகுதியிலும் அயலவர்களின் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.
இதில் சில வீடுகள் தொடர்ந்து ஈரலிப்புடன் காணப்படுவதால் அவற்றில் தங்க முடியாது மாற்று இடங்களை எதிர்பார்த்துள்ளனர்.
இவர்கள் வளர்த்த கால்நடைகளின் கொட்டில்களும் பாதிக்கப்பட்டுள்ளதால் அவற்றை பராமரிப்பதிலும் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
வயதான தமக்கு தமது வாழ்வாதாரமான இந்த கால்நடைகளை எவ்வாறு பராமரிப்பது என்று கவலை வெளியிடுகின்றனர்.
மூன்று வருடங்களுக்கு முன்னர் இவ்வாறானதொரு வெள்ளத்தினால் தமது பிள்ளையை பறிக்கொடுத்த தாய் தாம் தொடர்ந்தும் இவ்வாறு வெள்ளத்தினால் பாதிக்கப்படுவதாகவும் தம்மை யாரும் கண்டுக்கொள்வதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகள் வாக்கு வாங்குவதற்கு மட்டுமே தம்மை தேடி வருவதாகவும் இவ்வாறான நேரத்தில் தம்மை யாரும் பார்க்க வருவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அரிசி, பருப்பு மற்றும் சீனிக்கு நிர்ணய விலை |









16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
