தென் மாகாணத்தில் இன்று முதல் அறிமுகமாகும் புதிய நடைமுறை!
தென் மாகாணத்தில் இன்று முதல் கோவிட் தொற்று உள்ளவர்களின் தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சை மையங்கள் மற்றும் வீட்டு தனிமைப்படுத்தல்களுக்கு ஒரு புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சேவை மேல் மாகாணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு மிகவும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
குறித்த சேவையைப் பெற கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட நபரின் பின்வரும் தகவலை உள்ளிட்டு 1904 என்ற இலக்கத்திற்கு குறுந்தகவல் அனுப்ப வேண்டும் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அதற்கமைய, கோவிட் தொற்றாளர்கள் பின்வரும் பிரச்சினைகள் தொடர்பில் அதன் குறியீட்டை இடுவதன் மூலம் குறுஞ் செய்தியினை அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
A-சுவாசிப்பதில் சிக்கல் நிலை
B-காய்ச்சல் நிலை
C-எவ்வித அறிகுறியும் இல்லை உதாரணமாக: காய்ச்சல் நிலை B<இடைவெளி>வயது<இடைவெளி>தே.அ.அ.<இடைவெளி>முகவரி என குறிப்பிட்டு, 1904 இற்கு குறுஞ் செய்தி அனுப்ப வேண்டும். இதற்காக அம்பியூலன்ஸ் வண்டி சேவை உள்ளிட்ட ஏனைய சிகிச்சை வசதிகளும் வழங்கப்படும்.




