புதிய சுகாதார வழிகாட்டிக்கமைய இன்று முதல் நாட்டில் நடைமுறைக்கு வரும் விடயம்
கல்வி பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் கல்வி பொதுத் தராதர உயர்தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்கள் இன்று முதல் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ள புதிய சுகாதார வழிகாட்டலுக்கமைய குறித்த வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட உள்ளன.
50 சதவீத மாணவர் கொள்ளளவை கொண்டு மேலதிக வகுப்புக்களை நடத்த அனுமதி வழங்கப்படுகின்றது.
மேலும், சுகாதார வழிகாட்டிக்கு அமைய தேர்வுகளை நடத்தவும், கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தரம் 06 முதல் 09 வரையான வகுப்புக்களின் கல்வி நடவடிக்கைகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன(Dinesh Gunawardena) தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



