இந்திய அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துள்ள புதிய வெளியுறவு அமைச்சர்
இந்தியாவும் , இலங்கையும் மீனவர்களின் பிரச்சினைக்கு ஒரு நடைமுறை தீர்வைக் காண்பதற்கு இணக்கம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே புதிய வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸை, சந்தித்த போதே இந்த இணக்கம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கொவிட் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு இந்தியா அளித்து வரும் தொடர்ச்சியான ஆதரவுக்கு, வெளியுறவு அமைச்சர் பீரிஸ் இதன்போது நன்றி தெரிவித்தார்.
இந்திய கடற்படைக் கப்பல்களைப் பயன்படுத்தி, கிழக்கு இந்திய துறைமுகங்களிலிருந்து திரவ ஒட்சிசனை வழங்கிய இந்திய அரசாங்கத்துக்கு அமைச்சர் பீரிஸ் நன்றி தெரிவித்தார்.
இதேவேளை கடைசியாக 2016 இல் கூட்டப்பட்ட இந்திய-இலங்கை கூட்டு ஆணையத்தை மீண்டும் கூட்டும், சாத்தியக்கூறுகள் குறித்தும் இரு தரப்பினரும் விவாதித்தனர்.
இந்த கலந்துரையாடலில் இலங்கையில் இந்தியாவால் மருந்து உற்பத்தி ஆலைகள் அமைப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

மீனாவிற்கு பிரச்சனை கொடுக்க நினைத்து வம்பில் சிக்கிய ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam

நொருங்கிய கார்.. நிச்சயதார்த்தம் முடிந்த மூன்றே நாளில் விபத்தில் சிக்கிய விஜய் தேவரகொண்டா Cineulagam
