பதவியை இராஜினாமா செய்துள்ள புதிய நிதியமைச்சர்
நிதியமைச்சராக நேற்றைய தினம் பதவியேற்ற அலி சப்ரி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அலி சப்ரியின் கையெழுத்துடனான கடிதமொன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
குறித்த கடிதத்தில்,
2022ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் திகதி அமைச்சு பதவியை இராஜினாமா செய்யும் போது நான் இனி எந்த பதவியையும் ஏற்கப்போவதில்லை என தெரிவித்திருந்தேன்.
எனினும் நாடாளுமன்ற ஜனநாயகம் மற்றும் அதன் ஸ்திரத்தன்மையை கருத்தில் கொண்டும் வர்த்தக சமூக மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க நிதி அமைச்சராகப் பதவியை ஏற்றுக் கொண்டேன்.
அதுவும் நிரந்தர தீர்வு காணப்படும் வரை பதவியேற்பதாகத் தெரிவித்திருந்தேன்.
இருப்பினும் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு புதிய நிதியமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் நான் இந்த பதவியிலிருந்து விலக்கியுள்ளதுடன், நாடாளுமன்றத்திற்கு வெளியிலுள்ள ஒருவர் இந்த நிலைமையைக் கையாள்வாராக இருந்தால் அவரை நியமிப்பதற்காக நான் எனது நாடாளுமன்ற பதவியையும் விட்டுக்கொடுக்கத் தயாராக உள்ளேன் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





