ஹிக்கடுவையில் கடலில் மூழ்கி கடற்படை அதிகாரி பலி
ஹிக்கடுவ கடற்பரப்பில் உயிர்காக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த கடற்படை அதிகாரி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று(15.08.2023) மாலை இடம்பெற்றுள்ளதாக ஹிக்கடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வத்தளை, டிகோவிட்ட கடற்படை முகாமில் பணிபுரியும் 32 வயதுடைய கடற்படை அதிகாரி ஒருவரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
பலபிட்டிய கடற்படை பயிற்சிப் பாடசாலையானது 30 கடற்படை அதிகாரிகளுக்கான உயிர்காக்கும் பயிற்சி நெறியை ஹிக்கடுவ பன்னம்கொட பகுதியில் நடாத்தியுள்ளதுடன், உயிரிழந்த அதிகாரியும் இதில் பங்குபற்றியுள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதி
மேலும், குறித்த அதிகாரி பயிற்சியின் போது நீரில் மூழ்கி, மீட்கப்பட்டதாகவும், கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
