தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிகளை என்னிடம் தந்தால்...நாக விகாரை விகாராதிபதியின் உத்தரவு
புதிய இணைப்பு
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுக்கு காணிகளை மீள் கையளிக்க வேண்டும் என நயினாதீவு நாக விகாரை விகாராதிபதி ஸ்ரீ நவடகல பதும கீர்த்தி திஸ்ஸ தெரிவித்துள்ளார்.
தையிட்டி பகுதிக்கு இன்றைய தினம்(2) விஜயம் மேற்கொண்ட விகாராதிபதி காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி தனியாருடையது.அந்த காணிகளை அவர்களிடம் மீள கையளிக்க வேண்டும்.
தையிட்டி விகாரை தற்போது அமைந்துள்ள பகுதிகளை என்னிடம் தந்தால் தையிட்டி விகாரைக்கு சொந்தமான காணியில் காணிகளை இழந்தவர்களுக்கு மாற்றுக்காணிகளை தருவேன்.
பொலிஸார் போராடும் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். மாறாக அவர்களை அச்சுறுத்தி , அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர கூடாது என தெரிவித்தார்.
முதலாம் இணைப்பு
தையிட்டி விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில் நயினாதீவு விகாரை விகாராதிபதி நவதலக பதும தலைமையிலான பௌத்த பிக்குகள் இன்றையதினம்(2) தையிட்டிக்கு விஜயம் செய்துள்ளனர்.
இவ்வாறு விஜயம் செய்த குழுவினர் அங்குள்ள காணி உரிமையாளர்கள் மற்றும் பொது மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
தையிட்டிக்கு விஜயம்
குறித்த விகாரையானது தனியார் காணிகளை சுவீகரித்து சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்து தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் நாளையதினமும்(3) ஒரு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
கடந்த போராட்டத்தில் கலந்துகொண்ட சைவ மதகுரு, பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் என ஐவர் கைது செய்யப்பட்ட விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அந்தவகையில் குறித்த குழுவானது இன்றையதினம் அங்கு விஜயம் செய்துள்ளமையானது பெரும் எதிர்பார்புகளை ஏற்படுத்தியுள்ளது.
நேரில் சந்திப்பு
தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி ஜின் தோட்டை நந்தாராம தேரரை யாழ் . மாவட்ட செயலர் ம. பிரதீபன் வெள்ளிக்கிழமை தையிட்டி விகாரையில் நேரில் சந்தித்து கலந்துரையாடினர்.

கடந்த 31ஆம் திகதி தையிட்டி விகாரைக்காக காணிகளை இழந்தவர்களை மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடியதன் தொடர்ச்சியாக தையிட்டி விகாரதிபதியை இன்றைய தினம் சந்தித்ததாக மாவட்ட செயலர் தெரிவித்தார்.
மேலதிக தகவல்- தீபன்


டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 1 மணி நேரம் முன்
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri