பூஸா சிறைச்சாலை அதிகாரி கொல்லப்பட்ட விவகாரம் : வெளியான தகவல்
முன்னாள் சிறைச்சாலை அதிகாரி சிறிதத் தம்மிக்க என்பவரை சுட்டுக்கொலை செய்வதற்காக துப்பாக்கிதாரிகள் பயன்படுத்தியதாக கூறப்படும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் யக்கலமுல்ல பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முன்னாள் சிறைச்சாலை அதிகாரி சிறிதத் தம்மிக்க என்பவர் காலி, அக்மீமன, தலகஹ பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து நேற்று (13) பிற்பகல் இனந்தெரியாத நபர்கள் சிலரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
இரண்டு மோட்டார் சைக்கிள்கள்
61 வயதுடைய பூஸா சிறைச்சாலையின் முன்னாள் சிறைச்சாலை அதிகாரி ஒருவரே இவ்வாறு சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

இதனையடுத்து யக்கலமுல்ல பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், துப்பாக்கிதாரிகள் பயன்படுத்தியதாக கூறப்படும் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் யக்கலமுல்ல, தல்கஹவத்த பிரதேசத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss 10: மக்களின் சுவாரசியத்திற்காக முனியம்மாவின் விபரீத செயல்... அச்சச்சோ இப்படி மாட்டிக்கிட்டாரே? Manithan
மனைவியுடன் சண்டையை தவிர்க்க 21 வது மாடியின் பால்கனியில் இருந்து இறங்கிய கணவன்: காத்திருந்த சோகம் News Lankasri