அமைச்சரின் கூந்தலை பிடிக்க முடியாது என சூளுரை - மக்களை சீண்டும் சிங்கள அரசியல்வாதி
குருநாகலில் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிராக மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, குருநாகல் மேயர் அமைச்சருக்கு ஆதரவாக கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்.
அமைச்சர் ஜோன்ஸ்டனின் தலைமுடியையேனும் யாரும் தொடுவதற்கு அனுமதிக்க மாட்டோம் என அந்த கூட்டத்தில் மேயர் சவால் விடுத்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி அல்லது யாரேனும் முடிந்தால் குருநாகலில் உள்ள ஜோஸ்டனின் அலுவலகத்திற்கு வந்து பார்க்குமாறு நாங்கள் சவால் விடுகிறோம் என்று மேயர் கூறியுள்ளார்.
அமைச்சர் ஜோன்ஸ்டனுக்கு ஆதரவாக இரண்டு அழைப்புகள் மாத்திரமே தான் வழங்கியதாகவும் பெருமளவு கூட்டம் கூடியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பல்வேறு அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீடுகளை மக்கள் முற்றுகையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
"We will not allow anyone to even touch Johnston's hair. We challenge everyone to come here to Kurunegala" Kurunegala Mayor holds meeting supporting Minister Johnston Fernando pic.twitter.com/3QePTaiNRv
— NewsWire ?? (@NewsWireLK) April 6, 2022

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

sambar podi: ஐயங்கார் வீட்டு சாம்பார் பொடி நாவூறும் சுவையில் செய்வது எப்படி? காரசாரமான ரெசிபி Manithan

டிஆர்பியில் முன்னேறி வரும் விஜய் டிவியின் புதிய சீரியல்.. கடந்த வாரத்திற்கான டாப் 5 சீரியல் Cineulagam
