வீதியை கடக்க முற்பட்ட சிறுமியை மோதித் தள்ளிய மோட்டார் சைக்கிள்
திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிளொன்று சிறுமியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் சிறுமி பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்துச் சம்பவம் இன்று(11) காலை இடம்பெற்றுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேராறு பகுதியைச் சேர்ந்த 12 வயதுடைய சிறுமியொருவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கந்தளாய் பேராறு பிரதான வீதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் ,கடையில் பொருட்களை வாங்கிக்கொண்டு வீதியைக் கடக்க முற்பட்ட போதே வேகமாகச் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 13 மணி நேரம் முன்

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
