பல கிராமங்களை அச்சுறுத்தி வந்த கும்பல் அதிரடியாக கைது
எம்பிலிபிட்டிய - கொலொன்ன பிரதேசத்தில் பல கிராமங்களில் அச்சுறுத்தலாக இருந்த கும்பலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்தப் பகுதிகளில் மக்களை மிரட்டி, அச்சுறுத்தி கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த குழுவில் ஏனையவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கொலொன்ன - வாவல்பென, கும்புருகமுவ, ஹல்மில்ல மற்றும் கொடகும்புர பிரதேசங்களில் மக்களை அச்சுறுத்தி இந்த கொள்ளைச் சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
வீடுகளுக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை மிரட்டி பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்துவிட்டு ஒரு கட்டத்தில் பெண்களை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

25 நிமிடம், 24 தாக்குதல்கள்: குறிவைக்கப்பட்ட 9 பயங்கரவாத முகாம்கள், 70 பேர் பலி! பாகிஸ்தானில் இந்தியா அதிரடி News Lankasri

திருப்பி அடிக்கும் இந்தியா., பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் News Lankasri
