நாவலப்பிட்டியில் காணாமல்போன பாடசாலை மாணவிகள் கொழும்பில் கண்டுபிடிப்பு
க.பொ.த சாதாரணத்தர பரீட்சை முடிந்து கடந்த 15ஆம் திகதி முதல் நாவலப்பிட்டியில் இருந்து காணாமல் போனதாக கூறப்பட்ட இரண்டு மாணவிகளும் கடுவெலயில் உள்ள அவர்களது உறவினர்கள் வீட்டில் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுமிகள் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கொழும்புக்கு (Colombo) பயணித்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
பொலிஸில் முறைப்பாடு
இந்தநிலையில் அவர்கள் இருவரும் கடந்த 15ஆம் திகதி இரவு கடுவெலயில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ளனர். இதன்போதே அவர்கள் தொடர்பான தகவல் பொலிஸாருக்கு தெரியவந்துள்ளது.

முன்னதாக, கினிகத்ஹேனவில் உள்ள பரீட்சை நிலையத்தில் நடைபெற்ற க.பொ.த சாதாரணத்தர பரீட்சை முடிந்து இந்த சிறுமிகள் வீடு திரும்பவில்லை.
இதனையடுத்து அம்பகமுவ தேசிய பாடசாலையில் பரீட்சை நிலையத்திற்கு சென்ற இரண்டு சிறுமிகளின் பாதுகாவலர்களால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri