தன்னை சுற்றி 84 பேரை பாதுகாப்புக்கு வைத்திருக்கும் அமைச்சர்
தனது பாதுகாப்புக்காக 84 பேர் கொண்ட பாதுகாப்பு அணியை பயன்படுத்தி வரும் அமைச்சர் ஒருவர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
இந்த அமைச்சர், சிறப்பு பாதுகாப்பு பிரிவை சேர்ந்த 7 அதிகாரிகள், மூன்று பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மற்றும் 74 விசேட அதிரடிப்படையினரை தனது பாதுகாப்பு பயன்படுத்தி வருவதாக தெரியவருகிறது.
எவ்வாறாயினும் அமைச்சர் ஒருவரின் பாதுகாப்புக்கு 10 பொலிஸாரை மாத்திரமே பயன்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் அதனையும் மீறி தனக்கு விருப்பமான பொலிஸாரை தனது பாதுகாப்புக்கு பயன்படுத்தி வருபவர், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர (Sarath Weerasekara) எனக் கூறப்படுகிறது.
பொலிஸ் திணைக்களம் அமைச்சர் சரத் வீரசேகரவின் நிர்வாகத்தின் கீழ் வரும் அரச நிறுவனமாகும்.
சரத் வீரசேகர பொலிஸ் துறைக்கு பொறுப்பான அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக பதவியேற்ற பின்னர் சர்ச்சைக்குரிய பல சம்பவங்களை எதிர்நோக்கியவர்.