மக்கள் நடமாட்டமின்றி முழுமையாக முடங்கிய மன்னார் மாவட்டம்
நாடாளாவிய ரீதியில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தின் இயல்புநிலை இன்றைய தினம் முழுமையாக முடங்கியுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் வகையில் நாடாளாவிய ரீதியில் நேற்று இரவு 11 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 4 மணி வரை நாட்டில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் மக்கள் முழுமையாக வீடுகளில் முடங்கியுள்ளனர்.
மன்னார் நகரில் பொலிஸார் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு, அத்தியாவசிய தேவைகள் நிமித்தம் மாத்திரம் நடமாட அனுமதி வழங்கியுள்ளனர்.
மேலும் வீதிகளில் நடமாடுபவர்களை இராணுவம் மற்றும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு தேவை இன்றி நடமாடுபவர்களை எச்சரித்து அனுப்புகின்றனர்.
மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதுடன், அரச மற்றும் தனியார் போக்குவரத்துக்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் தனியார் மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளன.
எனினும் மன்னார் மாவட்டம்
மக்களின் நடமாட்டம் இன்றி முழுமையாக முடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





