பெண்களின் தொலைபேசிக்கு படங்களை அனுப்பிய நபர் 107 சிம் அட்டைகளுடன் கைது
பெண்களின் கையடக்க தொலைபேசிகளுக்கு ஆபாச படங்களை அனுப்பினர் எனக் கூறப்படும் ஒருவரை தாம் கைது செய்துள்ளதாக குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் கணனி குற்றங்கள் தொடர்பான விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் தனது உடல் பகுதிகளை புகைப்படம் எடுத்து அவர்களை பெண்களின் கையடக்க தொலைபேசிகளுக்கு அனுப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது சம்பந்தமாக கிடைத்த முறைப்பாட்டை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் 40 வயதான திருமணமான சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சந்தேக நபரின் வீட்டில் இருந்து பல தொலைபேசி நிறுவனங்களுக்குரிய 107 சிம் அட்டைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சந்தேக நபர் பலரது தேசிய அடையாள அட்டைகளின் பிரதிகளை பெற்று, அவற்றை பயன்படுத்தி, சிம் அட்டைகளை கொள்வனவு செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பதினாறாவது மே பதினெட்டு 4 மணி நேரம் முன்

Optical illusion: படத்தில் சரியான திசையில் இருக்கும் சரியான இலக்கத்தை கண்டுபிடிக்க முடியுமா? Manithan

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri
