இரட்டை கொலையுடன் தொடர்புடையவர் 11 வருடங்களின் பின்னர் கைது
இரட்டை கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் 11 வருடங்களின் பின்னர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுளார்.
வவுனியா - ஓமந்தை, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் கடந்த 2011 ஆம் ஆண்டு கணவன் மனைவி ஆகியோர் கொலை செய்யப்பட்டிருந்தனர்.
குறித்த கொலை சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவர் அந்தக்காலப்பகுதியில் கைது செய்யப்பட்டு வவுனியா நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
எனினும் குறித்த இருவரும் நீதிமன்ற வழக்கு தவணைகளில் ஆஜராகாமல் தலைமறைவாகியிருந்தனர்.
அவர்களில் ஒருவர் ஓமந்தை பொலிசாரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.
அவர் இன்று (27) நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.
11 வருடங்களின் பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
