கூழாமுறிப்பு பாடசாலையிலிருந்த தற்காலிக கொட்டகை தீயில் எரிந்து நாசம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாமுறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வளாகத்தில் அமைந்திருந்த தற்காலிக கொட்டகை திடீரென தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று நண்பகல் இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாமுறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வளாகத்தில் அமைந்திருந்த தற்காலிக கொட்டகை திடீரென தீப்பற்றி எரிந்ததை அவதானித்த கிராம மக்கள் அதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முற்பட்ட போதும் கொட்டகை தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.
தீ பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை சம்பவம் தொடர்பில் ஒட்டுசுட்டான்
பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டு விசாரணைகளை
ஆரம்பித்துள்ளனர்.










உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
