கம்பஹா மாவட்ட சட்டத்தரணிகள் சம்மேளனம் எடுத்துள்ள முக்கிய தீர்மானம்
கோவிட் பரவலைக் கருத்திற்கொண்டு கம்பஹா மாவட்ட சட்டத்தரணிகள் சம்மேளனம், ஆகஸ்ட் 23 வரை நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து விலகியிருக்கத் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் கம்பஹா மாவட்ட நீதிபதிக்கு கம்பஹா மாவட்ட சட்டத்தரணிகள் சம்மேளனத் தலைவர் லசந்த ஹேவமானே கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
நீதிமன்றத்துக்கு வந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் அரச அதிகாரிகளின் பாதுகாப்புக்கருதி இந்த முடிவைத் தாம் மேற்கொண்டதாக அவர் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கு அமைய, கம்பஹா நீதிமன்றத்தில் கட்டமைப்பு வசதிகள் இல்லையென்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் நேற்று கூடிய சம்மேளனத்தின் அவசரக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக கம்பஹா மாவட்ட சட்டத்தரணிகள் சம்மேளனத் தலைவர் லசந்த ஹேவமானே தெரிவித்துள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan
