கொழும்பில் ஹோட்டல்கள் மற்றும் நிறுவனங்கள் எடுத்துள்ள முக்கிய நடவடிக்கை
கொழும்பிலுள்ள பல முன்னணி ஹோட்டல்கள் உட்பட 10 அரச நிறுவனங்கள் முக்கிய தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளனர்.
நாளாந்தம் அதிகளவான மின்சாரம் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதனை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். குறித்த நிறுவனங்கள் தாமாகவே முன்வந்து ஜெனரேட்டர்களை நிறுவி அதனை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
இந்த நடவடிக்கையால் 100 மெகா வோட்ஸ் மின்சாரத்தை தேசிய கட்டமைப்பினால் சேமிக்க முடிந்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மின்சாரம் தொடர்பில் ஏற்பட்டுள்ள நிலைமையை தேசிய பிரச்சினையாக கருதி அந்த நிறுவனங்கள் செயற்பட்டிருப்பது முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஜெனரேட்டர்களுக்கு தேவையான செலவுகளை அந்த நிறுவனங்களே ஏற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 22 மணி நேரம் முன்

சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri

இனி 12 மணி நேரத்திற்கு பதில் 2 மணி நேரம் தான்.., ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில் இந்தியாவில் அறிமுகம் News Lankasri
