உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தும் அரசியல் கட்சிகள்!(Photos)
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை நேற்றைய தினம்(13.01.2023) செலுத்தியுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் வடக்குமாண சபை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா தலைமையிலான குழுவினரால் யாழ்.மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் இதுவரை யாழ்.மாவட்டத்தில் 3 அரசியல் கட்சிகளும் 4 சுயேட்சைக் குழுக்களும் இதுவரை உள்ளூராட்சித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன.
தேசிய மக்கள் சக்தி
தேசிய மக்கள் சக்தி (JVP) இன்று(14.01.2023) இரண்டு பிரதேச சபைகளிற்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தில் இன்று கட்டுப்பணம் அவர்களால் செலுத்தப்பட்டுள்ளது.
கரைச்சி, பச்சிலைப்பள்ளி ஆகிய இரண்டு பிரதேச சபைகளில் போட்டியிருத்தற்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஊழல் அற்ற அரசியலிற்கு ஆதரவளிக்குமாறு அவர்கள் கோரியிருந்தனர்.
செய்தி-எரிமலை










அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல் Cineulagam
