அநுரவுக்கு உதவிய விடுதலைப் புலிகள்! தனிப்பட்ட ரீதியில் அர்ச்சுனாவுக்கு கிடைத்த தகவல் என அறிவித்த மகிந்த தரப்பு
அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும், வெளிநாடுகளிலுள்ள அதன் பிரிவுகளும் உதவி செய்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா பலமுறை தெரிவித்ததாக பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இது அர்ச்சுனாவுக்கு தனிப்பட்ட ரீதியில் தெரியும் என அவர் தெரிவித்ததாகவும் சாகர காரியவசம் சுட்டிக்காட்டினார்.
பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
உறுதிப்படுத்திய அர்ச்சுனா
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இந்த அரசாங்கம் பௌத்தத்திற்கு எதிரான நிலையில் உள்ளது என்பதுதான் எங்களது கருத்து. ஆரம்பத்தில் இருந்தே இதே நிலையில் தான் நாங்கள் இருந்திருக்கின்றோம்.
ஆனால், வெறும் கருத்தையும் தாண்டி இப்போது அது தெளிவாகத் தெரிகின்றது. இதனை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனும் உறுதிப்படுத்தியிருக்கின்றார்.

அப்படியானால் அவர்களுக்கு இந்த நாட்டின் பலத்தை அழிக்க வேண்டும். வரலாற்று ரீதியாக, துட்டகைமுனு மன்னனின் காலத்தில் இருந்தே வெளிநாட்டுப் படையெடுப்புக்கள் நிகழ்ந்த போதெல்லாம் இந்த நாட்டைப் பாதுகாக்க மகா சங்கத்தினரே முன்னின்றனர்.
எனவே இந்த நாட்டிற்கு தீங்கு செய்ய நினைக்கும் அல்லது பலவீனப்படுத்த நினைக்கும் எந்தவொரு அமைப்பினதும் முதன்மை வேலை, இந்த வரலாற்றில் இருந்து பௌத்த கலாசாரத்தையும், பௌத்த பலத்தையும் அழிப்பதே ஆகும்.
எனவே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வர உதவிய அந்தப் பிரிவினரின் தேவைகளுக்கு ஏற்படச் செயல்படுகின்றதா என்ற நியாயமான சந்தேகம் எங்களுக்கு உண்டு என குறிப்பிட்டுள்ளார்.
ஷிரந்தி எமது கட்சியின் உறுப்பினர் அல்ல! நாட்டை விட்டு ஓடப் போகும் திருடனைப் போல கைது : பொதுஜன பெரமுன அறிவிப்பு