கபில சந்திரசேன விவகாரம் : போலி பிணையாளர்கள் மோசடியில் சிக்கிய சட்டத்தரணி
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன விசாரணைக் காவலில் இருந்தபோது, அவருக்குப் பிணை பெற்றுத் தருவதற்காக இரண்டு போலி நபர்களை முன்னிலைப்படுத்த உதவியதாகக் கூறப்படும் சட்டத்தரணி மற்றும் சிறை அதிகாரி ஒருவரைக் கைது செய்ய பொலிஸ் விரிவான விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.
பொலிஸ் தகவலின்படி , சம்பந்தப்பட்ட சிறப்பு பொலிஸ் குழு, சட்டத்தரணி மற்றும் சிறை அதிகாரியிடம் ஏற்கனவே விரிவான விசாரணை நடத்தி வாக்குமூலங்களைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தைத் தவறாக வழிநடத்திய குற்றத்திற்காக
சிறையில் இருந்தபோது கபில சந்திரசேன தனக்கு அறிமுகமான சிறை அதிகாரியிடம் பிணை பெற்றுத் தருவதற்காக இருவரைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரியிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அந்தக் கோரிக்கையின்படி, சிறைக்காவலரும் சட்டத்தரணியும் இணைந்து கேசல்வத்தை பகுதியைச் சேர்ந்த இரண்டு நபர்களைப் பணத்திற்காகக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

சந்திரசேனா இந்தப் பணிக்காக ரூ.75,000 தருவதாக உறுதியளித்துள்ளார் . மேலும் அந்தப் பணத்தைக் கொடுக்கத் தயாராக இருந்த அவருடைய முன்னாள் மேலாளர்களில் ஒருவர் பொலிஸாரால் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.
அடையாளம் தெரியாத நபர்களை முன்னிலைப்படுத்தி நீதிமன்றத்தைத் தவறாக வழிநடத்திய குற்றத்திற்காக கபில சந்திரசேனவை மீண்டும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதிபதி அசங்க எஸ். போதரகம கடந்த 7ஆம் திகதி உத்தரவிட்டிருந்தார்.
இருப்பினும் , அவரைக் கைது செய்யத் தயாரானபோது, கொள்ளுப்பிட்டியில் உள்ள ஒரு வீட்டில் கபில சந்திரசேன சந்தேகத்திற்கிடமான நிலையில் இறந்து கிடந்ததை குறிப்பிடத்தக்கது.
அடுத்த 48 மணிநேரத்திற்குள் வலுவிழக்கும் குறைந்த காற்றழுத்தம்! கடும் மழைவீழ்ச்சி தொடர்பில் எச்சரிக்கை
YOU MAY LIKE THIS VIDEO