உலகின் மிகப்பெரிய பிரம்மாண்டம்! கற்பனைக்கு அப்பாற்பட்ட ஆச்சர்யங்கள் - மிரளும் ஆராய்ச்சியாளர்கள்
இந்த உலகம் எண்ணற்ற பல அதிசயங்களை தன்னகத்தே கொண்ட ஒரு அதிசய பேழையாகும். எமது கற்பனைக்கும் அப்பாற்பட்ட ஆச்சர்யங்களும், அதிசயங்களும், பிரம்மாண்டங்களும் இந்த உலகத்தின் ஒவ்வோர் மூலை முடுக்குகளிலும் உள்ளன.
அப்படி ஒரு பிரம்மாண்டம் தொடர்பில் விரிவாக ஆராயலாமா? “அங்கோர்வாட்” உலகத்திலேயே நம்ப முடியாத பல பிரம்மாண்டங்களைக் கொண்ட கோவில்களின் தலைநகரம் என்று அழைக்கப்படும் மிகப் பெரிய கோவில்தான் இந்த அங்கோர்வாட். முதலில் இந்துக் கோவிலாக இருந்து பின்நாட்களில் புத்த கோவிலாக மாறிய ஓர் பிரம்மாண்டமே இந்த கோவில்.
காம்போஜ தேசம் என்றும், அங்கோர்வதம் என்றும் பிற பெயர்களால் அழைக்கப்படும் இந்த அங்கோர்வாட் இன்றைய காம்போடிய தேசத்தில் அமைந்துள்ளது.

இரண்டாம் சூரிய வர்மன் என்ற தமிழ் மன்னன் கம்போடியாவை கைப்பற்றிய போது அங்கு உள்ள அங்கோர்வாட் என்ற இடத்தில் உலகின் மிகப் பெரிய கோவிலை கட்டினார். இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களிலேயே இது தான் மிகப் பெரியது. அதுதான் இந்த அங்கோர்வாட்.
அங்கோர், கம்போடியாவில் உள்ள இந்துக்கோவிலாக இருந்து பின்னர் புத்த மதக் கோவிலாக மாறிய ஒரு தொகுதியாகும். இது 162.6 எக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. இது உலகின் மிகப்பெரிய மத வழிபாட்டுத் தலமாகும். இது பண்டைய கெமீர் இனத்தை சேர்ந்த இரண்டாம் சூரியவர்மனால் (கிபி 1113–1150) 12ஆம் நூற்றாண்டின் போது யசோதரபுரத்தில் (இப்போதைய அங்கோர்) கட்டப்பட்டது.
இது மாநில கோவிலாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது.

அப்போதைய அரசர்களின் சைவ பாரம்பரியத்தை உடைக்கும் விதமாக இக்கோவில் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கபட்டது. இக்கோவில் கெமர் பாரம்பரியத்தின் உயர்தர கட்டமைப்பை கொண்டது. இக்கோவில் கம்போடியா நாட்டின் சின்னமாக அந்நாட்டு கொடியில் இடம்பெற்றுள்ளது.
அங்கோர் என்பது நகரத்தையும், வாட் என்பது கோவிலையும் குறிக்கும். இது கெமீர் மொழிச் சொல்லாகும். இது உலக கட்டிடக்கலை வல்லுநர் வியக்கும் ஓர் படைப்பே கம்போடியாவின் இந்த அங்கோர்வாட் ஆலயம்.
500 ஏக்கரில் பரந்திருக்கும் இந்தக் கோவிலை ஒரு கலைப் பொக்கிஷமாக பாதுகாக்கப்படுகின்றது. இந்தக் கோவிலின் ஒரு பக்கச் சுற்றுச் சுவரின் நீளம் மூன்றரை கிலோமீட்டர்.
இந்தக் கோவிலுக்குள் நம் தமிழகத்து ஸ்ரீரங்கம் கோவிலைப் போன்று 20 கோவில்களை அடைக்கலாம்.
மேலும் பூமியிலிருந்து சுமார் 1000 அடி மேலே சென்று வானத்திலிருந்து படம் எடுத்தால் மட்டுமே இக்கோவிலை முழுமையாகப் படம்பிடிக்க முடியும். 1000 அடி உயரத்தில் இருந்து பார்த்தால் மூன்று அடுக்குகளாகத் தோற்றமளிக்கிறது இக் கோவில்.
முதல் அடுக்கில் உள்ள சுவரில் ராமாயணம், மகாபாரதக் காட்சிகள் சிற்பங்களாக உள்ளன. இரண்டாம் அடுக்கின் நான்கு திசைகளிலும் பெரிய சதுர வடிவத் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. மூன்றாம் அடுக்கில் விண்ணை நோக்கி உயர்ந்துள்ள ஐந்து கோபுரங்களாகக் காட்சி தருகிறது.
மேலும், இக்கோவிலுக்கு மிகப் பெரிய நான்கு நுழைவுவாயில்களும் உள்ளன. கெமர், திராவிடக் கலைகளைக் கொண்டு இக் கோவில் கட்டப்பட்டுள்ளது.
2ஆம் சூரியவர்மன் அங்கோர் வாட்டை முதலில் கட்டிய விஷ்ணு கோவிலை, சூரியவர்மன் இறந்த பிறகு ஆட்சிக்கு வந்த ஏழாம் ஜெயவர்மன் இதை பவுத்தக் கோவிலாக மாற்றினார்.
கடந்த 1992ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பு அங்கோர் வாட்டை உலக மரபுச் சின்னமாக அறிவித்ததுடன், அதிகம் சிதைவுறாமல் பராமரித்தும் வருகிறது.
கம்போடியாவில் உள்ள பிற பழமையான கோவில்களைப் போலவே அங்கோர் வாட்டும் தாவர வளர்ச்சி, பூஞ்சை, தரை இயக்கங்கள், போர் சேதம் மற்றும் திருட்டு ஆகியவற்றை ஏராளமாக சந்தித்துள்ளது.
கம்போடியாவின் கோவில் இடிபாடுகளை மீதமுள்ள கோவில்களுடன் ஒப்பிடும்போது அங்கோர் வாட் கோவிலுக்கான போர் சேதம் மிகவும் குறைவாகவே உள்ளது, மேலும் இதை மிகவும் கவனமாக புதுப்பிக்க வேண்டியதாகவும் உள்ளது.
நவீன காலத்திய அங்கோர் வாட் மறுசீரமைப்பும் பாதுகாப்பும், பிரான்சியக் கீழைத்திசை ஆய்வுக் கல்விக்கூடம் என்ற பிரான்சுநாட்டு அமைப்பு மேற்கொண்டது.
இதற்கு முன்னர் 1908 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் முதன்மையாக தள ஆராய்ச்சியுடன் சம்பந்தப்பட்டிருந்தன.
1970களின் முற்பகுதி வரை அங்கோர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் அதன் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு அங்கோர் வாட் பாதுகாப்பு மையம் பொறுப்பு வகித்தது.
1970களின் முற்பகுதிவரை புதுப்பித்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 1960களில் அங்கோர்வாட்டின் பெரும்பான்மையான புதுப்பிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கெமர் ரூச் ஆட்சிக்காலத்தில் இப்பணிகள் கைவிடப்பட்டன.