சுமார் 100 கோடி ரூபா பெறுமதியான அரிய வகை இரத்தினக்கல் இலங்கையில் கண்டுபிடிப்பு (PHOTOS)
இலங்கையில் மிகவும் அரிய வகையை சேர்ந்த இயற்கையான பெனகைட் இரத்தினக்கல்லொன்று (Natural Phenakite gemstone) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட பெனகைட் இரத்தினக்கற்களில் இது மிகப்பெரியது என தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை தெரிவித்துள்ளது.
பேருவளை பகுதியை சேர்ந்த இரத்தினக்கல் வியாபாரியான மொஹமட் பஸ்ரீன் நஸீர் என்பவர் பலாங்கொடையில் இருந்து குறித்த இரத்தினக்கல்லை கொள்வனவு செய்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த இரத்தினக்கல்லின் எடை 616.90 கரட் எனவும், இதன் பெறுமதி சுமார் 100 கோடி (1 பில்லியன்) ரூபா எனவும் குறித்த வர்த்தகர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இது தொடர்பில் தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் (NGJA) தலைவர் திலக் வீரசிங்க (Thilak Weerasinghe) கூறுகையில் இந்த இரத்தினக்கல்லானது மிகவும் அரிதானது என்பதால் விலை உயர்ந்தது என சுட்டிக்காட்டியுள்ளார்.



சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
