எரிவாயு சிலிண்டர் கிடைக்காத விரக்தி! - பெண் ஒருவர் செய்த காரியம்
சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படவில்லை என தெரிவித்து, எரிவாயு ஏற்றிச் சென்ற லொறியின் முன் தரையில் அமர்ந்து பெண் ஒருவர் போராட்டம் நடத்தியுள்ளார்.
வாத்துவ, பொதுப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள எரிவாயு விற்பனை நிலையத்திற்கு முன்பாக பெண் ஒருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
போதிய எரிவாயு இல்லை என எரிவாயு முகவர் நிலையத்தின் உரிமையாளர் அந்த பெண்ணிடம் கூறியுள்ளார். இதனையடுத்து குறித்த பெண் எரிவாயு சிலிண்டர் லொறி முன்பு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்.
இதனையடுத்து வாத்துவ பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இந்நிலையில், குறித்த பெண்ணுக்கு எரிவாயு சிலிண்டர் தருவதாக உறுதியளித்ததையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, நாடு முழுவதும் எரிபொருள் மற்றும் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு நிலவுவுதாக தெரிவித்து, அதனை பெற்றுக்கொள்வதற்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை காணமுடிகின்றது.
