நாட்டின் ஒருமைப்பாட்டை விரும்பினால் கிவுல் ஓயா திட்டத்தை கைவிடுக! அரசிடம் வலியுறுத்து

Jaffna Anura Kumara Dissanayaka Suresh Premachandran Government Of Sri Lanka Srilankan Tamil News
By Theepan Jan 27, 2026 05:54 AM GMT
Report

நாட்டின் ஒருமைப்பாட்டை விரும்பினால் கிவுல் ஓயாத் திட்டத்தை முழுமையாகக் கைவிடுமாறு அரசாங்கத்திடம் ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளருமான சுரேஷ் க.பிரேமச்சந்திரன் இது தொடர்பில் அவர் விளக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சர்ச்சையை கிளப்பி வரும் கிவுல் ஓயா திட்டம்.. பறிபோகுமா 13 000 ஏக்கர் தமிழர் நிலம்..!

சர்ச்சையை கிளப்பி வரும் கிவுல் ஓயா திட்டம்.. பறிபோகுமா 13 000 ஏக்கர் தமிழர் நிலம்..!

புதிதாக நிர்மாணிக்கப்படும் கிவுல் ஓயாத் திட்டம்

"மகாவலி எல் வலயத்தை உள்ளடக்கி புதிதாக நிர்மாணிக்கப்படும் கிவுல் ஓயாத் திட்டம் ஏற்கனவே இருந்த அரசுகளைப் போல் தமிழ் மக்களின் காணிகளைப் பறித்து அரச அனுசரணையுடன் தமிழ் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றத்தை ஏற்படுத்துவதையும், வடக்கு - கிழக்கு நிலத் தொடர்பை நிரந்தரமாகப் பிரிக்கும் உள்நோக்கத்தையும், இந்நாட்டின் பூர்வீக குடிகளான தமிழர்கள் தமது சொந்த பிரதேசத்திலேயே இரண்டாம்தரக் குடிமக்களாக மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

நாட்டின் ஒருமைப்பாட்டை விரும்பினால் கிவுல் ஓயா திட்டத்தை கைவிடுக! அரசிடம் வலியுறுத்து | The Kivu Oya Project Suresh Premachandran Request

எனவே, இந்தத் திட்டம் முழுமையாகக் கைவிடப்பட வேண்டும் என்று ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டணி, அநுர அரசை வலியுறுத்துகின்றது.

"வவுனியா வடக்கு பிரதேசத்தையும், முல்லைத்தீவு - மணலாறு பிரதேசத்தையும் உள்ளடக்கக்கூடிய வகையில் 23 ஆயிரத்து 456 மில்லியன் ரூபா செலவில் கிவுல் ஓயா என்ற ஒரு நீர்ப்பாசனத் திட்டத்துக்கான அணைக்கட்டு ஒன்றைக் கட்டுவதற்கு இப்பொழுது ஆட்சியில் உள்ள அநுரகுமார அரசானது 2 ஆயிரத்து 500 மில்லியன் ரூபாவை முதல் கட்டமாக ஒதுக்கியுள்ளது.

இந்த ஆண்டு ஆரம்பிக்கப்படும் இவ்வேலைத்திட்டமானது 2031ஆம் ஆண்டு முடிவுறுத்தப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது. இந்தத் திட்டம் 2011ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் மகாவலி ‘டு’ ஸ்கீமுடன் இணைந்ததாக உருவாக்க முயற்சி செய்தபோதும் பின்னர் அது கைவிடப்பட்டது. இப்பொழுது இந்த அரசு மீண்டும் அதே திட்டத்தை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

தமிழ் மக்களுக்குச் சொந்தமான பல்வேறுபட்ட குளங்கள், வயல்களை உள்ளடக்கி ஏற்கனவே மணலாற்றுப் பிரதேசத்தை சிங்களமயமாக்கி அதற்கு வெலிஓயா என்று பெயரும் சூட்டப்பட்டு வெளிநாட்டிலிருந்து நிதியைப் பெற்றுக்கொள்வதற்காக அது மகாவலி ‘டு’ வலயம் என்று பெயரும் சூட்டப்பட்டது.

இந்த மகாவலி ‘டு’ வலயத்துக்கு எந்தக் காலத்திலும் மகாவலி நீர் வரமாட்டாது என்பதை மகாவலி அதிகார சபையின் உயர் அதிகாரிகளே நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றில் தெளிவுபடுத்தியிருக்கின்றார்கள்.

யுத்தத்தின் பின்னர், இதனை ஒட்டிய பிரதேசங்களில் உள்ள கொக்கச்சான்குளம் என்ற கிராமம் போகஸ்வெவ என்றும், அதனையொட்டி மற்றொரு கிராமத்துக்கு நாமல்புர என்று பெயரும் சூட்டப்பட்டு அம்பாந்தோட்டை, மாத்தளை போன்ற தூரத்திலிலுள்ள சிங்களப் பிரதேசங்களிலிருந்து சிங்கள மக்கள் அழைத்துவரப்பட்டு குடியேற்றப்பட்டுள்ளனர்.

இப்பொழுது கிவுல் ஓயா நீர்ப்பாசனத் திட்டத்தின் மூலம் தமிழ் மக்கள் விவசாயம் செய்துவரும் பதினைந்துக்கும் மேற்பட்ட சிறிய குளங்களும், அதனை ஒட்டிய வயல் நிலங்களும், வவுனியா வடக்கில் உள்ள பல பழந்தமிழ் கிராமங்களும், அதன் குளங்களும், வயல் நிலங்களும் கிவுல் ஓயாவின் நீரேந்தும் பிரதேசத்துக்குள் மூழ்கடிக்கப் போகின்றன.

இதன் காரணமாக ஏற்கனவே வாழ்வாதாரங்களை இழந்து சிறுகச்சிறுக தமது விவசாயத்தை மேற்கொண்டு வரும் தமிழ் மக்களை மீண்டும் விரட்டியடிக்கும் நிலை தோன்றியுள்ளது.

முன்னர் இருந்த அரசுகள், முல்லைத்தீவு, வவுனியா மாவட்டத்தின் எல்லைப் பிரதேசங்களைச் சிங்கள மயமாக்கும் நோக்குடன் ஏற்படுத்திய குடியேற்றங்கள் இப்பொழுது இந்த ஆட்சியின் கீழ் விஸ்தரிக்கப்பட்டு, மகாவலி நீர் வராத போதும் கிவுல் ஓயா என்ற புதிய நீர்ப்பாசனத்திட்டம் ஒன்றை உருவாக்கி, மிச்சம் சொச்சமாக அங்கு வாழ்ந்து வரும் தமிழ் மக்களையும் வெளியேற்றுவதற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. “இந்தத் திட்டம் இன அடிப்படையில் முன்னெடுப்பதாகக் கூறப்படுவது தவறானது.

அரசியல் உள்நோக்கம் 

அரசியல் உள்நோக்கம் கொண்டது. தேசிய அபிவிருத்தி, விவசாய வளர்ச்சி, நீர்வள முகாமைத்துவம் இவைகளை முன்வைத்தே அரசாங்கம் இத்திட்டத்தை செயற்படுத்துகின்றது.

நாட்டின் ஒருமைப்பாட்டை விரும்பினால் கிவுல் ஓயா திட்டத்தை கைவிடுக! அரசிடம் வலியுறுத்து | The Kivu Oya Project Suresh Premachandran Request

எமது அரசில் இனவாதம், மதவாதம் இல்லை. மக்களை சமமாகக் கருதுகின்றோம். தமிழ் மக்களின் நிலவுரிமை, சமூக உரிமை பாதூக்கப்படும். சட்டத்துக்கு முரணாக நிலம் கையகப்படுத்தல் நடைபெறமாட்டாது. திட்டம் தொடர்பாக சகல நடவடிக்கைகளும் உரிய சட்ட நடைமுறைகளின் கீழேயே நடைபெறும்” என்று அமைச்சர் சந்திரசேகர் திருவாய் மலர்ந்திருக்கின்றார்.

இலங்கையின் முதலாவது பிரதமராக இருந்த டி.எஸ். சேனநாயக தொடக்கம், இன்றிருக்கின்ற ஜே.வி.பி. அரசு வரையில் விவசாய அபிவிருத்தி, அதற்கான நீர்ப்பாசனத் திட்டங்கள் என்ற போர்வையில் வடக்கு - கிழக்கில் பல்லாயிரக்கணக்கான சிங்கள மக்களை வலிந்து குடியேற்றியதனூடாக அந்தப் பிரதேசத்தில் வாழும் தமிழ் குடிப்பரம்பலை மாற்றியமைத்து, அந்தப் பிரதேசங்களில் பெரும்பான்மையாக வாழ்ந்த தமிழ் மக்களை சிறுபான்மையினராக்கி நாடாளுமன்றத்தில் தமிழர்கள் தமது பிரதிநிதித்துவத்தை இழக்கக்கூடிய அளவுக்கு இந்தக் குடியேற்றங்கள் நடந்துள்ளன.

இப்பொழுதும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. கபினட் அமைச்சராக இருக்கின்ற தமிழரான சந்திரசேகர் போன்றவர்களுக்கு இந்த வரலாறு தெரியாமல் இருக்கலாம்.

இவர் கூறுகின்ற சட்டத்துக்கு முரணாக எதுவும் செய்யப்பட மாட்டாது என்பதும், சட்ட நடைமுறைகளுக்கு இனங்கவே இந்தத் திட்டம் தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதும் தமிழ் மக்களின் காதுகளில் பூச்சுற்றும் வேலை.

இவர் இங்கு எந்தச் சட்டத்தைப் பேசுகின்றார்? இதுவரை காலமும் ஆட்சி செய்து வருகின்ற அரசுகள் தமக்கு ஏற்ற வகையில் நில அபகரிப்பை மேற்கொள்வதைத்தான் சட்ட நடவடிக்கை என்று இவர் சொல்கின்றாரா? இது ஓர் இனவாத நடவடிக்கை அல்ல என்றும் இவர் நிரூபிக்கப் பகீரதப் பிரயத்தனம் செய்கின்றார்.

புதிதாக உருவாக்கப்பட்ட சிங்கள குடியேற்றங்கள்

பழந்தமிழ் கிராமங்களை நீரில் மூழ்கடித்து, புதிதாக உருவாக்கப்பட்ட சிங்களக் குடியேற்றங்களுக்கு நீர்ப்பாசனம் வழங்குவதும், புதிய சிங்களக் குடியேற்றங்களை உருவாக்குவதும் இனவாதம் என்றில்லாமல் வேறு எப்படி இதனை அழைப்பது? எம்மைப் பொறுத்தவரையில், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டத்தின் குடிசனப் பரம்பலை மாற்றியமைக்கக்கூடிய தமிழ் மக்களை மீண்டும் அந்த மண்ணிலிருந்து விரட்டியடித்து ஏதிலியாக்கக்கூடிய இந்த நீர்ப்பாசனத் திட்டம் நிறுத்தப்பட வேண்டும்.

தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நிலங்கள் பறிபோவதைப் பார்வையாளர்களாக இருந்து பார்த்துக்கொண்டிருப்பது ஏற்புடைய விடயமல்ல.

நாட்டின் ஒருமைப்பாட்டை விரும்பினால் கிவுல் ஓயா திட்டத்தை கைவிடுக! அரசிடம் வலியுறுத்து | The Kivu Oya Project Suresh Premachandran Request

நாளை உங்களது சந்ததியினரும் இதனால் பாதிக்கப்படுவார்கள் என்பதை புரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கு வாக்களித்த மக்களின் நலன் சார்ந்தும் உங்களின் வருங்கால சந்ததியினரின் நலன் சார்ந்தும் இத்தகைய நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த வேண்டியது உங்களது கடமையும் பொறுப்புமாகும்.

சந்திரசேகர் போன்ற தமிழ் அமைச்சர்கள் மீண்டும் மீண்டும் நாங்கள் இனவாதிகள் அல்லர், மதவாதிகள் அல்லர் என்று கூறுவதற்குப் பதிலாக அரசு முன்னெடுக்கும் இத்தகைய இனவாத நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த முன்வரவேண்டும்.

மாறாக நீங்களும் அமைச்சரவையில் இணைந்து இவைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதும் இத்தகைய திட்டங்களுக்கு வக்காலத்து வாங்குவதும் வருந்தத்தக்கது.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல்லாயிரம் மில்லியன் ரூபாய்களுக்குக் கடனாளியாகி நாட்டை வங்குரோத்தில் வைத்திருக்கும் நீங்கள், சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிறுவுகின்ற நோக்கில் மேலும் 23,456மில்லியன் ரூபாவை செலவு செய்ய முற்படுகின்றீர்கள் என்றால் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும் நாட்டில் அபிவிருத்தியையும் எவ்வாறு கொண்டு வருவீர்கள்?

உண்மையில் ஜனாதிபதி அவர்கள் நாட்டின் ஒருமைப்பாட்டையும் மக்களிடையே நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த விரும்பினால் இந்தத் திட்டத்தை முற்றுமுழுதாகக் கைவிடவேண்டும் என்று கோருகின்றோம்." - என்றுள்ளது.

சர்ச்சையை கிளப்பி வரும் கிவுல் ஓயா திட்டம்.. பறிபோகுமா 13 000 ஏக்கர் தமிழர் நிலம்..!

சர்ச்சையை கிளப்பி வரும் கிவுல் ஓயா திட்டம்.. பறிபோகுமா 13 000 ஏக்கர் தமிழர் நிலம்..!

தங்கத்தை வாங்கி குவிக்கும் வங்கிகள்: விலைகளில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றத்திற்கான காரணம்

தங்கத்தை வாங்கி குவிக்கும் வங்கிகள்: விலைகளில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றத்திற்கான காரணம்

மேலதிக தகவல் - ராகேஸ்

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US