ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கும் முக்கிய நபர்! நளின் பண்டார வெளியிட்டுள்ள தகவல்
இலங்கையின் விவசாய அமைச்சர் மஹிந்தாநந்த அளுத்கமவின் அதிகாரங்களை விட ராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்சவுக்கு அதிகாரங்கள் உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார (Nalin Bandara) தெரிவித்துள்ளார்.
சீனாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சேதனைப்பசளையில் பக்றீரியா இருப்பதாக கூறி அதனை இலங்கையின் அதிகாரிகள் நிராகரித்தனர்.
எனினும் தற்போது அதனை மீண்டும் பரிசோதனை செய்து நாட்டுக்குள் கொண்டு வருவதற்கான ஆயத்தங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதன்போது சசீந்திர ராஜபக்சவின் செயற்பாடுகளுக்கே வலு உள்ளது.
மஹிந்தாநந்த அளுத்கமகே பொம்மையைப் போன்று மாத்திரமே செயற்பட முடியும். இந்த நிலையில், விவசாயிகள் உட்பட்ட நாட்டு மக்கள், சீனாவின் இந்த சேதன பசளை என்ற குப்பைகளை துறைமுகத்தில் இருந்து நாட்டுக்குள் எடுத்து வர அனுமதிக்கக்கூடாது என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையில், இந்த விடயத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு யார் ஆலோசனை வழங்குகிறார்கள் என்று தேடியபோது, குழந்தைகள் விசேட வைத்திய நிபுணர் அனுருத்த பாதெனியவின் பின்னணியிலேயே இந்த செயற்பாடுகள் இடம்பெறுகின்றன என்பது தெரியவந்துள்ளது.
நாட்டின் விவசாயத்துறையில் பல நிபுணர்கள் இருக்கும் போது அனுருத்த பாதெனிய, எவ்வாறு விவசாயம் தொடர்பில் ஆலோசனைகளை வழங்க முடியும் என்பது கேள்விக்குரிய விடயமாகும் என்றும் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri