யாழ். ஊடகவியலாளரின் வீட்டின் மீதான தாக்குதலின் பின்னனியில் இராணுவத்தினர் : சிறீதரன் குற்றச்சாட்டு

Sri Lanka Army Jaffna S. Sritharan Sri Lanka Police Investigation
By Theepan Jun 16, 2024 11:36 PM GMT
Report

யாழில் ஊடகவியலாளரின் வீடு தாக்குதலுக்குள்ளாகி மூன்று தினங்களாகியும் இதுவரை எவரையும் பொலிஸார் கைது செய்யவில்லை என குற்றஞ்சாட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், குறித்த தாக்குதலின் பின்னணியில் இராணுவத்தின் மறைகரங்கள் உள்ளதென தெரிவித்துள்ளார்.

அச்சுவேலியில் தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளரின் இல்லத்தை நேற்று(16.06.2024) பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கை வரும் ஜெய்சங்கர் சம்பந்தனுடன் முக்கிய பேச்சு

இலங்கை வரும் ஜெய்சங்கர் சம்பந்தனுடன் முக்கிய பேச்சு

இலக்கு வைத்து தாக்குதல்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நீண்டகாலத்திற்கு பின்னர் ஊடகவியலாளரை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் கடந்த 13ஆம் திகதி நடைபெற்று இன்றுடன் மூன்று நாள்களாகியும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

யாழ். ஊடகவியலாளரின் வீட்டின் மீதான தாக்குதலின் பின்னனியில் இராணுவத்தினர் : சிறீதரன் குற்றச்சாட்டு | The Journalist S House Was Attacked In Jaffna

யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், பொலிஸார் ஆகியோர் தேடுகிறோம் பிடிக்கிறோம் என்கிறார்கள். எதுவும் நடப்பதாக இல்லை. இதே ஜனாதிபதியை பற்றியோ அரச உயர் அதிகாரிகள் பற்றியோ யாராவது பதிவு போட்டால் ஒரு சில மணிநேரங்களில் கைது செய்யப்படுவார்.


யாழ் மாவட்டத்தில் மூலைக்கு மூலை இராணுவம், கடற்படை, விமானப்படை பொலிஸார் குவிக்கப்பட்டு இருக்கும்போது எவ்வாறு இவர்களுக்கு தெரியாமல் மோட்டார் சைக்கிள்களில் துணிகரமாக வாள்கள் பொல்லுகளுடன் வரமுடிகிறது.

சஜித்துக்கு எதிராக ரணிலும் அனுரவும் சேர்ந்து கூட்டுச் சதி: ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு

சஜித்துக்கு எதிராக ரணிலும் அனுரவும் சேர்ந்து கூட்டுச் சதி: ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு

 காணி துண்டு விடுவிப்பு

வீட்டுக்கு வெளியே நின்ற பேருந்து, முச்சக்கரவண்டியை தாண்டி ஊடகவியலாளரின் மோட்டார் சைக்கிளை இனங்கண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். குறித்த விடயத்தை திசைதிருப்புவதற்காக திருநங்கைகள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

யாழ். ஊடகவியலாளரின் வீட்டின் மீதான தாக்குதலின் பின்னனியில் இராணுவத்தினர் : சிறீதரன் குற்றச்சாட்டு | The Journalist S House Was Attacked In Jaffna

நாட்டின் ஜனாதிபதி பலாலி வசாவிளான் பகுதியில் காணி துண்டு விடுவிப்புக்காக வந்தபோது, காணி விடுவிக்கப்படவில்லை மக்கள் கூடியநிலையில் அது தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற த.பிரதீபன், க.பரதன் ஆகிய இரண்டு ஊடகவியலாளர்களும் இராணுவத்தினரால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகப்பட்டு இராணுவப் புலனாய்வாளர்களால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அரசாங்கம் திறந்தவெளி சிறைச்சாலைக்குள் அடக்குறைகளை விரிவுபடுத்தி பிரயோகிப்பதையே இதன்மூலம் பார்க்கமுடிகிறது. இதனை நாம் வன்மையாக கண்டிக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

குழப்பப்பட்டுள்ள சுமந்திரனின் பெரும் திட்டமிடல்

குழப்பப்பட்டுள்ள சுமந்திரனின் பெரும் திட்டமிடல்

தாயகத்தில் தந்தையின் உயர்வு கண்டு வியந்த புலம்பெயர் மகன்

தாயகத்தில் தந்தையின் உயர்வு கண்டு வியந்த புலம்பெயர் மகன்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW


GalleryGalleryGalleryGallery
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US