கோவிட் தொற்றாளர்களால் நிரம்பி வழியும் ஐ.டி.எச் வைத்தியசாலை
கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனை கோவிட் நோயாளிகளால் நிறைந்துள்ளதாக அதன் பணிப்பாளர் ஹசித அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த மருத்துவமனையில் தற்போது 160 கோவிட் தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மருத்துமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் 8 பேருக்கு சிகிச்சை அளிக்க முடியும். தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள அனைத்து கட்டில்களும் நிறைந்துள்ளன.
கோவிட் தொற்றுக்கு உள்ளாகி பாரதூரமான நோய் அறிகுறிகளுடன் கூடியவர்களுக்கு கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையிலேயே சிகிச்சை வழங்கப்படுகிறது.
மருத்துவமனையில் ஓரளவுக்கு நெரிச்சலான நிலைமை ஏற்பட்டிருந்தாலும் அதனை சமாளித்து சிகிச்சைகளை முன்னெடுத்து வருவதாகவும் ஹசித அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவமனையில் காணப்பட்ட உயிர் வாயு பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
