ரணிலை தனியாக சந்தித்த பசில்! எதிர்க்கட்சித் தரப்பில் இருந்து கசிந்த தகவல்

Basil Rajapaksa Tissa Attanayake Wickremesinghe Ranil 21st Amendment
By Benat Jun 07, 2022 04:41 AM GMT
Report

உத்தேச அரசியலமைப்பு திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள இரட்டை குடியுரிமை விவகாரம் தொடர்பில்  முன்னாள் அமைச்சர் பசில்  ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்று ஐக்கிய மக்கள் சக்தியின்  தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். 

எனினும், எக்காரணம் கொண்டும்  இந்த விடயத்தில் மாற்றங்களை மேற்கொள்ள அனுமதிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். 

21ஆவது அரசியலமைப்பு  சீர்திருத்தம்

ரணிலை தனியாக சந்தித்த பசில்! எதிர்க்கட்சித் தரப்பில் இருந்து கசிந்த தகவல் | The Issue Of Dual Citizenship

ஐக்கிய மக்கள் சக்தியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 21ஆவது திருத்தமே வர்த்தமானிப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான உயர் நீதிமன்றத்தின் அறிவிப்பு எதிர்வரும் 15 ஆம் திகதி சபாநாயகருக்கு வழங்கப்படவுள்ளது.

இந்த திருத்தத்தில் 19 இற்கும் அப்பால் 19 பிளஸ் என்ற வகையில் பல திருத்தங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதற்கு ஐக்கிய மக்கள் சக்தி முழுமையான ஒத்துழைப்பினை வழங்கும்.

ஆனால் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 21 ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. அதன் உள்ளடக்கங்கள் என்ன என்பது எமக்கு முழுமையாகத் தெரியாது. இதனை நிறைவேற்றுவதாயின் 19 இல் உள்ள அடிப்படை ஜனநாயக உறுப்புரைகளையும் உள்வாங்க வேண்டும். அவ்வாறில்லை எனில் அரசாங்கத்தின் அரசியலமைப்பு திருத்தத்தினை நிறைவேற்றுவதற்கு இன்னும் ஓரிரு மாதங்கள் செல்லும்.

ஐக்கிய மக்கள் சக்தியின் முன்மொழிவு

ரணிலை தனியாக சந்தித்த பசில்! எதிர்க்கட்சித் தரப்பில் இருந்து கசிந்த தகவல் | The Issue Of Dual Citizenship

ஆனால் ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள திருத்தத்தினை விவாதத்திற்கு எடுத்துக் கொண்டால் இம்மாதம் 3 ஆம் வாரத்திற்குள் நிறைவேற்றிக் கொள்ள முடியும். எனவே எம்மால் முன்வைக்கப்பட்ட திருத்தத்தினை விரைவில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளுமாறு வலியுறுத்துகின்றோம்.

இவ்வாறான நிலையில் பசில் ராஜபக்ச  உள்ளிட்ட தரப்பினர்  தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. எக்காரணம் கொண்டும் இந்த விடயத்தில் மாற்றங்களை மேற்கொள்ள அனுமதிக்க முடியாது என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார். 

மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US