மகிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமராகினாலும் ஆச்சரியமில்லை: கோட்டாபய ரணில் ஆட்சி தொடர்பிலும் தகவல்
பிரதமர் பதவியிலிருந்து விலகிய மகிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமராகினாலும் அதிசயம் இல்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நிறுவுநரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது,
பதவி விலகியமைக்கான காரணம்
"ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரான மகிந்த ராஜபக்ச அழுத்தங்களுக்கு அடிபணிந்து பிரதமர் பதவியிலிருந்து விலகவில்லை. அவர் சுயவிருப்பின் பேரிலேயே பதவி விலகினார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியிடமே பெரும்பான்மைப் பலம் தொடர்ந்தும் உள்ளது. எனவே, பிரதமர் பதவியிலிருந்து விலகிய மகிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமராகினாலும் அதிசயம் இல்லை.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சுயவிருப்பத்துக்கிணங்கவே புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டார்.
அதற்காக ரணிலின் நியமனத்துக்கு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினர் எதிர்ப்பு என்று அர்த்தம்கொள்ள முடியாது.
ஜனாதிபதி - பிரதமர் இணைந்து முன்னெடுக்கும் நாட்டின் முன்னேற்றகரமான அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆதரவு வழங்கும்" என்றார்.
இலங்கையில் பல துறைகளில் வேலை இழக்கும் அபாயம் - பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை |