எரிபொருள் கோரி அமைச்சர் விடுத்த கோரிக்கையை நிராகரித்த ஐஓசி நிறுவனம்! (Video)
இலங்கை மின்சார சபைக்கு எரிபொருள் வழங்குமாறு மின்சக்தி அமைச்சர் முன்வைத்த கோரிக்கையை லங்கா ஐஓசி நிறுவனம் நிராகரித்துள்ளது. தங்களுக்கு போதுமான அளவு எரிபொருள் இல்லாத காரணத்தினால் இவ்வாறு குறித்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இலங்கைக்கு எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்காக இந்தியா புதிதாக மேலும் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடன் எல்லை சலுகையை வழங்கியுள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் ஊடக அறிக்கை ஒன்றிலேயே இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவை உள்ளிட்ட கொழும்பு தொலைகாட்சிகளில் இடம்பெற்ற முக்கிய செய்திகளை இந்த பதிவில் காணலாம்.
