எல் நினோவால் இலங்கைக்கு ஏற்படவுள்ள தாக்கம்! அவசர கலந்துரையாடலில் அரசாங்கம்
எல் நினோவின் பாதிப்பால் இலங்கையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விநியோகம் மற்றும் விலைகள் மீதான தாக்கத்தை மதிப்பிடுவதற்கும், எந்தவொரு இடையூறுகளையும் சமாளிப்பதற்கான தயாரிப்புகளை வலுப்படுத்துவதற்கும் அரசாங்கம் இன்றைய தினம் (25.08.2026) விசேட கலந்துரையாடலை நடத்தியுள்ளது.
வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கியுள்ளார்.
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இருப்பு
இந்த மதிப்பீட்டின் ஒரு பகுதியாக, அதிகாரிகள் இறக்குமதியாளர்களிடம் உள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இருப்புகளை ஆய்வு செய்ததோடு, இலங்கை சுங்கத்துறையிடமிருந்து பெறப்பட்ட தொடர்புடைய தரவுகளையும் ஆராய்ந்தனர்.
நிலையான சந்தை விலைகளைப் பராமரிக்கும் அதேவேளையில், பருப்பு, உருளைக்கிழங்கு, வெங்காயம், உலர்ந்த மீன் மற்றும் சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்வது குறித்தும் இறக்குமதியாளர்களுடன் விரிவான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.

மாற்றங்களால் ஏற்படக்கூடிய பற்றாக்குறை
மோசமான வானிலை மற்றும் உலகளாவிய விநியோக நிலைகளில் ஏற்படும் மாற்றங்களால் ஏற்படக்கூடிய பற்றாக்குறைகள் மற்றும் விலை உயர்வுகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தியது.
சந்தை நிலவரங்கள் மற்றும் வானிலை நிலவரங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும், உருவாகும் பற்றாக்குறைகள் அல்லது விலை அழுத்தங்களைச் சமாளிக்கத் தேவையான முடிவுகள் உடனடியாக எடுக்கப்படும் என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
ஆபத்தான நபரின் கட்டுப்பாட்டில் ஆசிரியர் - விசாரணையில் திடுக்கிடும் தகவல் - சிக்கப் போகும் மனைவியும் மகனும்
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 9 Evening