தனியார் வங்கிகள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கிக்கு கொடுக்கப்பட்டுள்ள யோசனை!
இலங்கையில் உள்ள தனியார் வங்கிகளுக்கு கிடைக்கும் வெளிநாட்டு நாணயங்களில் மூன்றில் ஒரு பங்கை இலங்கை மத்திய வங்கி ((Cenral Bank of Srilanka)) பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில(Udaya Gammanpila)அரசுக்கு பெற்றுக்கொள்ளும் இந்த யோசனையை முன்வைத்துள்ளார். மருந்து, மருத்துவ உபகரணங்கள், எரிபொருள் உட்பட அத்தியவசிய பொருட்களை இறக்குமதி செய்ய இந்த பணத்தை இலங்கை மத்திய வங்கிக்கு வழங்குமாறு அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் நிலவும் அந்நிய செலாவணி தட்டுப்பாடு காரணமாக அத்தியசிய உணவு, மருந்து, எரிபொருள் போன்றவற்றை இறக்குமதி செய்வதில் பெரும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக இலங்கை அரசாங்கம் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து கைமாற்று உடன்படிக்கை மூலம் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம் News Lankasri
சர்ச்சைகளுக்கு மத்தியிலும் கெத்து காட்டும் த்ரிஷா! மே குறித்து என்ன சொல்லியுள்ளார் தெரியுமா? Manithan
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
நான் செத்துப்போகலாம்.. கண்கலங்கி அழும் அண்ணாமலை! சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam