இராணுவத்தின் கையில் ஒப்படைத்த கணவரை இன்றுவரை காணவில்லை! கதறும் முன்னாள் போராளி
யுத்தத்தின் வலிகளை சுமந்துகொண்டு இன்றும் எத்தனையோ குடும்பங்கள் வாழ்கின்றன.
அந்த வதையில்,ஒட்டுசுட்டான் கொரணி என்ற கிராமத்தில் வசிக்கும் முன்னாள் போராளியான முல்லைத்தீவு ,முத்தையன்கட்டு பகுதியில் வசிக்கும் சச்சிதானந்தம் பத்மரஞ்சினி தனது துயரங்களை கண்ணீரோடு இவ்வாறு பகிர்ந்துக்கொண்டுள்ளார்.
2009ம் ஆண்டு ஓமந்தை சோதனைச் சாவடியில் வைத்து இராணுவத்திடம் எனது கணவரை ஒப்படைத்தேன். விசாரித்து விட்டு அனுப்புகின்றோம் என்று கூறி எங்களை முதலில் அனுப்பிவிட்டனர்.
ஆனால் இன்று வரை காணவில்லை. விசாரணைக்கு என்னை அழைத்து மரணச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளுமாறும் தெரிவித்தனர்.
நான் எனது கையால் கணவரை ஒப்படைத்தேன் எப்படி மரணச் சான்றிதழ் பெற முடியும், இல்லையென்றால் இல்லை என்று கூற வேண்டும்.
11 வருடமாக என்ன நிலைமை என்று தெரியாது என தனது வேதனைகளை எமது ஐ.பி.சி தமிழின் உறவுப்பாலம் நிகழ்ச்சில் இவ்வாறு பகிர்ந்துக்கொண்டுள்ளார். இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் Whatsapp /Viber +94767776363/+94212030600





அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
