விநாயகமூர்த்தி முரளிதரனின் உறுதிமொழியையடுத்து தற்காலிகமாக நிறைவுக்கு வந்த உண்ணாவிரத போராட்டம்
இலங்கை போக்குவரத்துச் சபையின் மட்டக்களப்பு முகாமையாளரை இடமாற்றக்கோரி, அங்குள்ள ஊழியர்கள் சிலர் மேற்கொண்டுவந்த சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டம் பிரதமரின் மட்டு.அம்பாறை மாவட்ட இணைப்பாளரும், முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரனின் உறுதிமொழியையடுத்து தற்காலிகமாக நிறைவுக்கு வந்துள்ளது.
மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபைக்கு முன்பாக பந்தல் அமைத்து இந்த உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்ததுடன், இந்த போராட்டத்திற்கு மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபையில் கடமையாற்றும் ஊழியர்களின் ஒரு பகுதியினரும் ஆதரவு வழங்கி வந்துள்ளனர்.
முகாமையாளரே நாங்கள் அடிமைகள் அல்லர்”, “தொழில் சங்கத்துக்கு இலஞ்சம்கொடுத்து, தொழிலாளர்களை பழிவாங்காதே”, “அரக்கன் செயலாற்று முகாமையாளரை வெளியேற்று”, “தங்களது அடியாட்களை சாலை வளாகத்தினுள் அடாவடித்தனம் புரிய இடமளியாதே” போன்ற பதாதைகளை போராட்டம் நடாத்தும் பகுதியில் தொங்கவிடப்பட்டிருந்தது.
கடந்த 09ஆம் திகதி ஆரம்பமான இந்த சாகும் வரையிலான போராட்டம் தொடர்பில் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து இன்று போராட்டம் நடைபெறும் பகுதிக்கு வந்த அவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் பணிப்பின் பேரில் நேரடியாக சென்ற இணைப்பாளர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
இது தொடர்பில் போக்குவரத்து துறை அமைச்சர் காமினி லொக்குகேயுடனும் கலந்துரையாடிய நிலையில் , போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் கோரிக்கை தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுக்கும் என அமைச்சர் உறுதியளித்துள்ளதாகவும் இணைப்பாளர் வி.முரளிதரன் உறுதியளித்துள்ளார்.
அத்துடன் இது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சருக்கும் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்குமிடையில் சந்திப்பினை ஏற்படுத்தி பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுத்தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.
இந்த நிலையில் போராட்டத்தினை தற்காலிகமாக இடை நிறுத்துவதாகவும், எனினும் தமது கோரிக்கை நிறைவுபெறும் வரையில் சுகவீன விடுமுறையில் இருக்கப்போவதாகவும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து போராட்டக்காரர்களுக்கு பழச்சாறு வழங்கி முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் போராட்டத்தினை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.








திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

15 நாட்களாக நிறுத்தப்பட்டிருக்கும் F-35B பிரித்தானிய போர் விமானம்: அகற்றப்பட்ட தரவுகள் News Lankasri
