46ஆவது அமர்வுக்காக நாளை மறு தினம் கூடவுள்ள மனித உரிமைகள் பேரவை
ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ள புதிய தீர்மானம் நாட்டில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவிக்கும் என்று இலங்கை தொடர்பான முக்கிய குழு தெரிவித்துள்ளது.
மனித உரிமைகள் பேரவை, தனது 46ஆவது அமர்வுக்காக நாளை மறு தினம் கூடவுள்ளது.
இதன்போது இலங்கை குறித்த அறிக்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செய்ல் பெச்சலெட்டால் முறையாக தாக்கல் செய்யப்படும்.
இந்த நிலையில் இலங்கை தொடர்பான முக்கிய குழு, வரவிருக்கும் மனித உரிமைகள் கூட்டத்தொடருக்கான தயாரிப்புக்காக இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடா, ஜெர்மனி, வடக்கு மெசிடோனியா, மொண்டிக்ரோ, மலாவி ஆகிய நாடுகளுடன் பிரித்தானியாவும் இலங்கை தொடர்பான முக்கிய குழுவில் உள்ளடங்கியுள்ளது.





மகனையே கொடூரமாக மிரட்டும் ஆதி குணசேகரன், பெண்கள் திட்டம் நடக்குமா! எதிர்நீச்சல் தொடர்கிறது அடுத்த வார ப்ரோமோ Cineulagam
