யாழில் பிரசவமான உடனேயே புதைக்கப்பட்டுள்ள சிசு
யாழ். வடமராட்சி கிழக்கு, வத்திராயனில் பிறந்த சிசு புதைக்கப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
சிசுவின் சடலத்தை நேற்று (03.01.2023) நாய் இழுத்துச் சென்றதால் இந்த கொடூர சம்பவம் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தை கண்ட பொது மக்கள் உடனடியாக நாயை விரட்டி சடலத்தை மீட்டுள்ளனர்.
புதைக்கப்பட்டிருந்த சிசு
பிரசவமான உடனேயே சிசு புதைக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
நாய் இழுத்து சென்ற இடத்துக்கு அண்மையாக உள்ள பகுதியில் சிசு புதைக்கப்பட்ட இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
நேற்றுமுன் தினம் இந்த சிசு புதைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.
விசாரணைகள்
இந்த நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் பெண்ணொருவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர் கணவனைப் பிரிந்து வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

விமானங்களில் இருந்து தப்பித்து எதிரிப் பகுதிக்குள் விழும் விமானிகள் ஏன் தாக்கப்படுவதில்லை? News Lankasri
