பிரித்தானியாவில் ஈழத் தமிழர் ஒருவருக்கு கிடைக்கப்பெற்றுள்ள உயர் விருது
யாழ்ப்பாணம் கோப்பாய், அச்சுவேலி வளலாயை பூர்வீகமாகக் கொண்ட பேராசிரியர் அரவிந்தன் குமாரசாமி (Prof. Arri Coomarasamy) பிரித்தானியாவின் உயர் விருதுகளில் ஒன்றான OBE (Order of the British Empire) விருதை பெற்றுள்ளார்.
இந்த விருது பிரித்தானிய மன்னரின் பிறந்தநாளில் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பேராசிரியர் அரவிந்தன் குமாரசுவாமி பேர்மிங்காம் பல்கலைக்கழகத்தின் மருத்துவ மற்றும் பல் மருத்துவ அறிவியல் கல்லூரியிலும், மகளிர் மருத்துவ மற்றும் பரிசோதனை மருத்துவப் கல்லூரியிலும் மருத்துவப் பேராசிரியராகவும், பேர்மிங்காம் பெண்கள் மருத்துவமனை அறக்கட்டளையில் மகளிர் மருத்துவம், இனப்பெருக்க மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை ஆலோசகராகவும் பணியாற்றுகிறார்.
மாட்சிமை மிக்க மன்னரால் OBE விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்
இவருக்கு கிடைத்த இந்த உயர் விருது குறித்து birmingham women's and children's hospital (BWC) தனது உத்தியோகபூர்வ தளத்தில் பின்வருமாறு தெரிவித்துள்ளது.
எங்கள் BWC குழுமத்தில் மிகவும் விரும்பப்படும் உறுப்பினரான பேராசிரியர் அரி. குமாரசாமி, பெண்கள் மற்றும் குடும்பங்களுக்கு உதவுவதில் தனது ஆராய்ச்சியின் மூலம் அவர் ஆற்றிய பணியைப் பாராட்டி, மாட்சிமை மிக்க மன்னரால் OBE விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். என்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், பெருமிதம் கொள்கிறோம்.
நமது மகளிர் மருத்துவமனையில் பணிபுரியும் பேராசிரியர் குமாரசாமி, உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய கருச்சிதைவு மற்றும் பிரசவத்தின் போது ஏற்படும் கடுமையான ரத்தப்போக்கு போன்றவற்றிற்கான ஆராய்ச்சியாளராக களமிறங்கி தன் சேவையை தொடர்கிறார்.
Huge congratulations to Prof @arricoomarasamy who has been awarded an OBE to recognise his work on research into miscarriage and severe bleeding in childbirth. Very well deserved! #KingsBirthdayHonors @unibirmingham @IMSR_UoB @WHOCCGWH @tommysbham https://t.co/ZBHivsMrUc pic.twitter.com/2KROElP7eZ
— Medical and Dental Research (UoB) (@unibirm_MDS) June 19, 2023
எங்கள் அறக்கட்டளையின் மகப்பேறு மருத்துவ ஆலோசகரான, பேராசிரியர் குமாரசாமி பேர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் பெண்ணோயியல் மற்றும் இனப்பெருக்க மருத்துவப் பேராசிரியராகவும், ரொமியின் கருச்சிதைவு ஆராய்ச்சிக்கான தேசிய மையத்தின் இயக்குநராகவும், உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய மகளிர் ஒத்துழைப்பு மையத்தின் இணை இயக்குநராகவும் உள்ளார்.
மேலும் பிரித்தானியாவில் இவரால் ஆரம்பிக்கப்பட்ட அம்மாலைஃப் என்ற தொண்டு நிறுவனம், குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் மகப்பேறு இறப்புகளைக் குறைக்கும் உலகளாவிய நோக்கத்துடன் தனது சேவையை தொடர்கிறது. அத்துடன், பேராசிரியர் குமாரசாமி இளம் மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு வழிகாட்டுவதில் ஆர்வமாக உள்ளார், மேலும் அவரிடம் பயிற்சி பெற்ற பலர் சிறந்த மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களாக உருவாகியுள்ளனர்.
உலகெங்கிலும் உள்ள மக்களுக்கான விஷயங்களை மேம்படுத்துவதற்கான அவரது அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வம் என்பவற்றை கௌரவித்து ஜூன் 16 வெள்ளிக்கிழமை மூன்றாவது மன்னர் சார்லஸ் அவர்களின் பிறந்தநாள் மரியாதை அறிவிப்பின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்ட இந்த மதிப்புமிக்க விருது அங்கீகரிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
Delighted to see Prof @arricoomarasamy awarded an OBE in the King’s Birthday Honours.
— Uni of Birmingham (@unibirmingham) June 19, 2023
Prof Coomarasamy received his undergraduate medical education here at Birmingham & has been recognised for research into miscarriage & severe bleeding in childbirth https://t.co/P2dHAETE8k pic.twitter.com/AMLPxcQnOq
இந்த விருது குறித்து கருத்து தெரிவித்த பேராசிரியர் குமாரசாமி,
கருச்சிதைவு மற்றும் பிரசவம் தொடர்பான இறப்புகளைச் கையாள்வதில் எங்கள் ஆராய்ச்சிக் பிரிவுகள் ஆற்றிவரும் சக்திவாய்ந்த பணிக்கான அங்கீகாரமாக இது அமைந்துள்ளது..
ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கும், உலகில் எங்காவது ஒரு தாய் பிரசவத்தின்போது இறந்துவிடுகிறார். எங்கள் ஆராய்ச்சியின் தாக்கம் தாய்மார்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கான வாழ்க்கையை உறு்திப்படுத்தவதாக அமையலாம். தாய் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் கொண்டாடப்படுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |