கொழும்பில் மக்களின் செயற்பாடுகள் தொடர்பில் சுகாதார துறையினர் அதிருப்தி
கொழும்பின் பல இடங்களில் ஒன்றுக்கூடும் மக்கள் சுகாதார வழிமுறைகளை மறந்து செயற்படுவதாக கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி ருவன் விஜேமுனி (Ruwan Wijayamuni ) தெரிவித்துள்ளார்.
இது அபாயமிக்க நிலைமை என நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போது அவர் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி செலுத்தும் பணிகள், முடக்க நிலை காரணமாக கொவிட் தொற்று மற்றும் மரணங்கள் பாரிய அளவு குறைவடைந்துள்ளது. தற்போது மரணங்கள் மிகவும் குறைவான அளவிலேயே பதிவாகுகின்றது. எனினும் கொழும்பு மக்களின் செயற்பாடு வருத்தமளிக்கின்றது.
கொழும்பில் ஒரே நேரத்தில் மக்கள் அதிக அளவில் ஒன்றுக்கூடுகின்றார்கள். முகக் கவசமேனும் அணிவதில்லை என தகவல் கிடைத்துள்ளது.
டெல்டாவின் மற்றைய மாறுபாடுகளின் பாதிப்புகள் தொடர்ந்து பரவிக் கொண்டிருப்பதனால் மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri