“நடுத்தர மக்களின் சட்டை பைக்குள் கை வைத்துள்ள அரசாங்கம்”
வாகன விபத்துக்கு வரி விதித்தன் மூலம் அரசாங்கம் இம்முறை வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக நடுத்தர வகுப்பு மக்களின் சட்டை பைக்குள் கை வைத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன (Ruwan wijewardana) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களிடம் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி மக்களின் சட்டை பைகளை நிரப்பியது. எனினும் சௌபாக்கிய நோக்கின் மூலம் மக்களின் சட்டை பைகள் வெற்று பைகளாக மாற்றப்பட்டுள்ளன.
அரசாங்கத்தின் மீது மக்களுக்கு பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாத போதிலும் வரவு செலவுத்திட்டத்தின் மூலம் ஓரளவு நிவாரணத்தை வழங்கும் என்ற சிறிய நம்பிக்கையை கொண்டிருந்தனர்.
எனினும் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவின் முதலாவது வரவு செலவுத் திட்டம் புஷ்வாணம் என்பது தற்போது நாட்டுக்கு தெரியவந்துள்ளது எனவும் ருவான் விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார்.
