அரசாங்கம் மூன்றாக பிளவடையும்! ஐக்கிய மக்கள் சக்தி உறுதி
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான இந்த அரசாங்கம் மூன்றாக பிளவடையும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.
சூழ்ச்சி செய்து ஆட்சியை கைப்பற்றும் எவ்வித நோக்கமும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
இந்த அரசாங்கத்தை விரட்டியடிப்பதற்கு மக்கள் ஆயத்தமாக இருக்கின்றார்கள். எனினும் எங்களுக்கு அவசரமில்லை. பொய்யாக தலைகளை மாற்றி, சூழ்ச்சி செய்து ஆட்சியை கைப்பற்ற நாம் விரும்பவில்லை.
மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடிக்க நாம் தயாரில்லை, ஜனநாயக கட்டமைப்பின் பிரகாரம் தேர்தலின் ஊடாகவே நாம் ஆட்சியை கைப்பற்றுவோம். எதிர்வரும் ஆகஸ்ட் மாதமளவில் இந்த அரசாங்கம் மூன்றாக பிளவடையும்.
தனது சீடர்கள் என பெசில் ராஜபக்ச நினைத்துக் கொண்டிருக்கும் 50க்கும் மேற்பட்டவர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேறி எதிர்க்கட்சியுடன் இணைந்து கொள்வார்கள். அவர்கள் எங்களுடன் இணைந்து கொள்வார்கள் நான கூறவில்லை.
எனினும் அவர்கள் எதிர்க்கட்சியில் இணைந்து கொள்வார்கள்.
நாட்டை சீரழித்துக் கொண்டிருக்கும் குடும்பத்தை தேர்தல் ஒன்றின் மூலமே நாம் விரட்டியடிப்போம் என எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.
அண்ணன்கள் வீட்டில் ஏற்பட்ட அவமானம், அழுத கோமதிக்கு வந்த சந்தோஷ செய்தி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 கொண்டாட்ட எபிசோட் Cineulagam
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan