முடக்கம் குறித்த அரசாங்கத்தின் தீர்மானம் நடைமுறை சாத்திமானது – அர்ஜூன டி சில்வா
தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் குறித்த அரசாங்கத்தின் தீர்மானம் நடைமுறை சாத்தியமானது என ராகம மருத்துவ பீடத்தின் சிரேஸ்ட பேராசிரியர் டொக்டர் அர்ஜூன டி சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும் பத்து நாட்களுக்கு நாட்டை முடக்குவதற்கு அரசாங்கம் இன்றைய தினம் தீர்மானம் எடுத்திருந்தது.
இவ்வாறு முடக்குவதன் மூலம் எதிர்வரும் நவம்பர் மாதமளவில் நாட்டில் சாதகமான ஓர் நிலையை அவதானிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாளாந்த கோவிட் தொற்று உறுதியாளர்கள் எண்ணிக்கை 1500 விடவும் குறைவடையும் போது நாட்டை திறப்பது குறித்து சில தீர்மானங்களை எடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த எண்ணிக்கையிலான நோயாளர்களை பராமரிப்பதற்கு எமது வைத்தியசாலை கட்டமைப்பில் போதியளவு வசதிகள் உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் தடுப்பூசி ஏற்றுகையை தீவிரப்படுத்த வேண்டுமென தெரிவித்துள்ளார்.
மொத்த சனத்தொகையில் 80 வீதமானவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் வரையில் ஓரளவு பயணக்கட்டுப்பாடுகளை அமுல்படுத்த வேண்டிய அவசியம் காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.
நாட்டை திறப்பதற்கு முன்னதாக நடைமுறைச் சாத்தியப்பாடுடைய சுகாதார வழிகாட்டல்களை தயாரித்துக்கொள்ள வேண்டியது அவசியமானது என பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.



