இலங்கை தொடர்பில் அமெரிக்க காங்கிரஸ் யோசனையை கடுமையாக எதிர்க்கும் அரசு
இலங்கை தொடர்பாக அமெரிக்க காங்கிரஸ் சபையில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனையை நடைமுறைப்படுத்த வேண்டாம் என அமெரிக்க காங்கிரஸ் சபையின் வெளிவிவகார குழுவிடம் உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை அரசு சார்பில் அமெரிக்காவின் வொஷிங்டனில் உள்ள இலங்கை தூதுவர் ரவிநாத ஆரியசிங்க இந்த கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அமைச்சு கூறியுள்ளது.
அமெரிக்காவின் காங்கிரஸ் சபை உறுப்பினர்கள் முன்வைத்துள்ள இந்த யோசனை, தற்போது காங்கிரஸின் வெளிவிவகாரம் சம்பந்தமான குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால், இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.
வடக்கு கரோலினோவின் குடியரசு கட்சியின் காங்கிரஸ் உறுப்பினர் டெபோரா ரோஸ் தலைமையிலான காங்கிரஸ் உறுப்பினர்கள் 5 பேர் இலங்கை சம்பந்தமான இந்த யோசனையை கடந்த மே மாதம் 18 ஆம் திகதி காங்கிரஸ் சபையில் சமர்ப்பித்தனர்.
இந்த யோசனைக்கு இலங்கை அரசு கடந்த வாரம் கடும் எதிர்ப்பை முன்வைத்தது. இந்த யோசனையை முன்வைக்கப்பட்டுள்ள விதம் குறித்து ஆராயும் போது, அது மனித உரிமை தொடர்பான யோசனை இல்லை.
இதனால், அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் ஊடாக இலங்கை அரசு, அமெரிக்க வெளிவிவகார குழுவிடம் உத்தியோகபூர்வமாக தனது எதிர்ப்பை முன்வைத்துள்ளது.
இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளை தமிழர்களின் தாயமாக அங்கீகரிக்க வேண்டும் என அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் தமது யோசனையில் தெரிவித்துள்ளனர்.
You May Like This Video......
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam